வோடபோன் ஐடியாவின் "வி" என்ற புதிய தொலைத் தொடர்பு பிராண்ட் அறிமுகம்
"வி"(vi) என்ற புதிய பிராண்டை வோடபோன் ஐடியா தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்தர் தக்கர் அறிமுகம் செய்தார்.
இந்திய தொலைத் தொடர்பு ஒருங்கிணைப்பின் உச்சமாக வோடபோன், ஐடியா ஆகிய இரண்டு நிறுவனங்கள், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைக்கப்பட்டது.
இருந்த போதிலும் தனித்தனி அடையாளங்களுடன் செயல்பட்டு வந்த நிலையில், தொலைத் தொடர்புத் துறையில் தற்போது நிலவும் கடும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், வி என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்தர் தக்கர் தெரிவித்துள்ளார்.
புதிய பிராண்ட் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments